தனியார் மருத்துவமனை போல் அரசு மருத்துவக்கல்லூரி!. போக விருப்பமில்லாத மக்கள் மற்றும் நோயாளி!. - Seithipunal
Seithipunal


மறைந்த ஜெயலலிதாவின் உத்தரவின்படி புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி நிறுவப்பட்டது. இதற்கு முன் அங்கு அரசு மருத்துவமனையும், அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையும் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

.
இப்போது புதுக்கோட்டை மாவட்டம்  மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மக்கள் கூறுகையில் எங்களுக்கு இந்த இரண்டு மருத்துவமனை இருக்கும்போது மிகவும் வசதியாக இருந்தது. பேருந்துநிலையத்தில் இருந்து நடந்தே செல்லும் தூரம் தான். ஆனால் இப்போது இரண்டு மருத்துவமனையையும் எடுத்து மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றுள்ளனர். 

    

                                  
புதுக்கோட்டை  அரசு மருத்துவக்கல்லூரி புதுக்கோட்டை  பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் மக்கள் செல்வதற்கு சிரமமாகவும் உள்ளது என கூறுகின்றனர்.மற்றும் மருத்துவமனையை  புதுக்கோட்டை  மருத்துவக்கல்லூரிக்கு  மாற்றியபிறகு    
அங்கு மக்களையும் நோயாளியையும் சிறைக்கைதியை போலவே கையாளுகின்றனர் என மக்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாதாரண சோதனைக்கு சென்றால் கூட அட்மிஷனை போட்டு படுக்கையில் படுக்கவைத்துவிடுகிறார்கள்.

புதுக்கோட்டை  மருத்துவக்கல்லூரி பார்ப்பதற்கு அழகாக உள்ளது ஆனால் நோயாளிகள் அங்கு செல்வதற்கு மிகவும் பயம் கொள்கிறார்கள். புதுக்கோட்டை  மாவட்டம் அரிமளம் தாலுகாவில் ஆனந்த்ராஜ் என்ற இளைஞர்க்கு சிலநாட்களுக்கு முன்பு காய்ச்சலுக்காக சென்றுள்ளார். அவரை   5 நாட்களுக்கு படுக்கையில் அட்மிசன் போட்டுவிட்டு அனுப்பிவிட்டார்களாம். அவருக்கு காய்ச்சல் நிற்காமல் அரிமலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவரை பார்த்து என்னவென்று  விசாரித்தபோது சாதாரண காய்ச்சல் தான் என்று ஒரு ஊசி போட்டு ஒரு மணிநேரத்தில் சரி ஆகிவிட்டதாம். அவர் மிகவும் மனவேதனையுடன் வீட்டில் உள்ளவர்களை கஷ்டப்படுத்திவிட்டேன் என கூறினார். அவர் மற்றும் புதுக்கோட்டை  மக்கள் கூறுகையில் பழைய அரசு மருத்துவமனை இல்லாதது எங்களுக்கு சிரமமாக உள்ளது என கூறினார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people not fullfill for medical college


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->