மணல்கொள்ளைக்கு எதிராக கிராமங்கள் கையில் எடுத்த கடைசி ஆயுதம்.! செய்வதறியாது திகைத்து நின்ற அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


மணல் கடத்தலைத் தடுக்க, ஆதார், ரேசன் கார்டுகளைத் துறக்கத் துணிந்த மக்கள்….சபாஷ்!

தமிழகமெங்கும் தற்போது, கரையான் புற்றை விட, மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது, மணல் திருட்டு. இதற்கு, ஆளும் கட்சியினர், காவல் துறை அதிகாரிகள் என சகலரும், கமிசன் பெற்றுக் கொண்டு, ஆதரவு தருவதால், எதிர்காலத்தில், ஆற்றில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடாமல் தேங்கி, விவசாயத்தைப் பாதிக்கப் போகிறது, என்கிற உண்மையை, விவசாயம் செய்யும் மக்கள் உணர்ந்து விழித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே, துரையூர், எம்.அய்யம்பாளையம், ராயக்காவலசு, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில், உள்ள கண்மாயில், சிலர் அனுமதி இன்றி மணல் அள்ளி வருகின்றனர்.

இது பற்றி, பொது மக்கள் பல முறை புகார் மனுக்கள் கொடுத்தும், இது வரை எந்த அதிகாரிகளும், நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை.
    
அதிகாரிகளுக்குச் சேர வேண்டிய தொகை எல்லாம் சரியாகச் சென்று விடுவதால், வருகின்ற புகார்கள் மீது, அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க மனம் வருவதி்ல்லை.

இதனைத் தொடர்ந்து, நேற்று, எம். அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கிராம மக்கள் அனைவரும் கூடி, ஆலோசனை நடத்தினர்.

அதன்படி, இந்தப் பகுதியில் திருட்டு மணல் அள்ள தடுக்க, கலெக்டரிடம் மனு கொடுப்பது என்றும், அதற்கும் நடவடிக்கை இல்லை என்றால், கிராம மக்கள் அனைவரும், தங்களது ரேசன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை வட்டாட்சியரிடம் ஒப்படைப்பது என்றும், தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

கிராம மக்களின் இந்த துணிச்சலைக் கண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PEOPLE AGAINST SAND ROBBERY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->