தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம்!! அதற்கு நீங்கள் ரெடியா?? - Seithipunal
Seithipunal



சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் கே.ஆர்.ராமசாமி  கலந்துகொண்டு பேசினார். அந்த விவாதத்தில் அவர் தமிழகத்தில் நிதி பற்றாக்குறை அதிகரித்து விட்டது. அதேபோல் கடன் சுமையும் அதிகரித்துவிட்டது. 

இதற்கு பதிலளித்த ஓபன்னீர்செல்வம், மத்திய அரசின் நிதி பகிர்வு நமக்கு கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இதனால் நமக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நம்முடைய பற்றாக்குறை அதிகரிக்கவில்லை. ஜி.எஸ்.டி. வரி மத்திய அரசுக்கு பெருமளவு சென்று விடுகிறது. நமக்கு 2 வரிகளை தவிர வேறு எதுவும் இல்லை என கூறினார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் தமிழகத்திற்கான நிதி குறைக்கப்பட்டது. அன்றைக்கு தொடங்கி தற்போது வரை இது தொடருகிறது. உங்கள் ஆட்சியில் அப்போது நிதி அமைச்சராக ப.சிதம்பரம் தான் இருந்தார். எனவே இதைப்பற்றி அவரிடம் கேளுங்கள் என துணை முதல்வர் கூறியுள்ளார்.

ராமசாமி கூறுகையில், உள்ளாட்சி தேர்தலை ஏன் நீங்கள் நடத்தவில்லை.,18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவில்லை. திருவாரூர் தேர்தல் தள்ளிப்போனது ஏன்?. நீங்கள் எதை தடுத்தாலும் நாடாளுமன்ற தேர்தலை தடுக்க முடியாது. மேலும் நீங்கள் தேர்தலுக்கு அச்சப்படுகிறீர்கள் என கூறினார்.

இதற்கு பதிலளித்த அதிமுக தரப்பினர், தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகவே இருக்கிறது. எங்களுக்கு தேர்தலை கண்டு பயம் இல்லை. தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம் உங்களால் அது முடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும், யாருடைய முதுகிலோ ஏறி பயணிப்பது தான் உங்கள் தேர்தல் நிலைப்பாடு என ஜெயக்குமார் பேசியுள்ளார். இவ்வாறு கடும் விமர்சனத்துடன் விவாதம் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops talk about last election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->