#விழுப்புரம் || உதயநிதியின் பிரச்சாரத்திற்கு சென்ற வாகனம் விபத்து.. ஒருவர் பலி, 15 பேர் காயம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனை முடித்துக் கொண்டு அவர் விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்திற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் லோடு வாகனங்களில் அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் சின்ன தச்சூரிலிருந்து பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். 

அவ்வாறு அழைத்து வரப்பட்ட ஒரு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 14 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person died in Villupuram road accident going to udhayanithi campaign


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->