வீடு தேடி வரும் அட்டை.. தென் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை..? தேர்தலுக்காக தொடங்கிய அதிரடி நடவடிக்கை..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்விழிப்புணர்வு வாசகங்கள்அடங்கிய அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டஆட்சியர்-தேர்தல் அலுவலர்சந்தீப் நந்தூரி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகளை கடந்ததேர்தலில் குறைந்த வாக்குசதவீதம் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அஞ்சல்அட்டைகளை வாக்காளர்களுக்கு வழங்கிட அஞ்சல் பணியாளர்களிடம் வழங்கினார்.

உதவி ஆட்சியர் அனு முன்னிலை வகித்தார்.இந்திய தேர்தல் ஆணையம், நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தேவையான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறுஇடங்களில் விழிப்புணர்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் மூலம் பல்வேறு இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் வேட்புமனுத்தாக்கல் இறுதிநாளான 26.3.2019 வரை பெயர் சேர்த்து கொள்ளலாம்என ஆட்சியர் தெரிவித்தார்.



 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One lakh awareness mail card to increase the vote: Tuticorin Innovation Action


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->