நீதிமன்றத்தில் ஆஜராகாமல் மீண்டும் எஸ்கேப் ஆன பிரபல நடிகர்.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்த நிலையில், இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், கடந்த 5-ந்தேதி நடைபெற்ற வழக்கில் எஸ்.வி. சேகர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று 20-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் இல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்ததோடு, அவரின் வழக்கறிஞரிடம் பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டார்.

இதையடுத்து, இந்த வழக்குகள் சம்பந்தமாக 6 வாரத்திற்கு கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என எஸ்.வி.சேகர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரித்த நீதிபதி, அவர் 6 வாரம் கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். இதனால் இன்று நடந்த இந்த வழக்கின் மீதான விசாரணையில், எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன், எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராகுவதற்கு, விலக்கு அளித்ததற்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி வருகிற 23-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

once again actor s v sekar not go to court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->