துருப்பிடித்த கார்களினால் தான் விபத்துக்கள், அதிகம் நிகழ்கிறது!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!! - Seithipunal
Seithipunal


இன்டர்நே‌ஷனல் ஷிங்க் அசோசியே‌ஷனும், மும்பை ஐ.ஐ.டி.யும், இணைந்து துருப்பிடிக்கும் கார்களினால் ஏற்படும் விபத்து, எவ்வளவு கார்கள் துருப்பிடிக்காமல் சரியாக பராமரிக்கப்படுகிறது? போன்றவற்றை எல்லாம் குறித்து சென்னையில் ஆய்வு நடத்தினார்கள். 

சென்னையில் பயன்படுத்தப்படும் துருப்பிடித்த கார்களினால் விபத்துகள் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் இந்த ஆய்வில் தெரிய வந்து இருப்பதாக பேராசிரியர் ஆனந்த் கண்ணா தெரிவித்தார்.

முன்னாள் பேராசிரியர் ஆனந்த் கண்ணா, 2 ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து இந்த ஆய்வினை நடத்தி இருக்கிறார். ஒரு காரில் ‘சீட் பெல்ட்’, ‘ஏர் பேக்’ சரியாக இருக்கிறதா? என பார்ப்பது போல, கடலோர பகுதிகளில் உபயோகப்படுத்தப்படும் கார்கள் துருப்பிடிக்காமல் இருக்கிறதா? என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதை இந்த ஆய்வு மூலம் எடுத்து சொல்லி இருக்கிறார்.

'தற்பொழுது உள்ள கார்களில் 50 சதவீதத்திற்க்கும் மேல் இரும்பை கொண்டு செய்யப்படுகிரது. கார்கள் துருப்பிடிக்காமல் இருக்க துத்தநாகம் பூச வேண்டும். அயல்நாடுகளில் துத்தநாகம் பூசப்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்கிறார்கள். ஆனால், இந்தியாவில் அவ்வாறு பரிசோதனை செய்வதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் அதை பின்பற்றுவதும் இல்லை.எனவே கற்களை உபயோகப்படுத்தும் வாகன ஓட்டிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்' என்று பேராசிரியர் கூறியுள்ளார்.

English Summary

old cars are reason of accident


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal