லஞ்சம் சிறிது குறைவாக கொடுத்ததால் ஆத்திரத்தில் அதிகாரிகள் செய்த செயல்.!! - Seithipunal
Seithipunal


லஞ்சம் வாங்குவதும் குற்றம்,கொடுப்பதும் குற்றம் என தமிழக அரசு கூறிவருகிறது. இந்நிலையில் மணல் எடுப்பதற்கு லஞ்சம் கொடுக்காததால் என்னுடைய டிராக்டரை போலீசார் சேதப்படுத்தியதுடன், டயர்களையும் கழற்றி எடுத்து சென்று விட்டனர் கரூர் விவசாயி புகார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் , இடையப்பட்டி கிழக்கு கிராமத்தைச் சார்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் விவசாயி. அவர் தனது சொந்த தேவைகளுக்கு டிராக்டர் பயன்படுத்தி வருகிறார். இவர் தனது தேவைக்காக அருகில் உள்ள பொன்னியாற்று அணையில் இருந்து சிறிது மணல் அள்ளியுள்ளார். மேலும் அங்கு நடக்கும் மற்றோரு  பணிக்கும் தன் டிராக்டரில் மணல் அள்ளி செல்ல ஒப்பந்தம் செய்துள்ளார்.

police have damaged farmer’s tractor for not paying him money

இந்நிலையில் இவர் டிராக்டரைப் உபயோகப்படுத்த பாலவிடுதி காவல்நிலைய உளவுத்துறை ஏட்டு மயில் மற்றும் அங்குள்ள போலீஸார் சிலர் ரூ. 20,000 லஞ்சம் கேட்டதாகக் சொல்லப்படுகிறது. ஆனால் 15,000 ரூபாய் மட்டும் ராமகிருஷ்ணன் அளித்துள்ளார். மீதமுள்ள 5,000 ரூபாயை அவரால் உடனே அளிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த    போலீசார் அவரது வீட்டுக்கே சென்று அவரது டிராக்டரை சேதப்படுத்தியது மட்டுமின்றி  டிராக்டரின் வீல்களையும் கழற்றி எடுத்து சென்றுவிட்டதாக ராமகிருஷ்ணன் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது தற்போது விவசாயிகள் மத்தியில் ஆத்திரத்தை உண்டாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

officers damage former property becaoue of low bribery


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->