என் மகனை போல ஆங்கிலத்தில் பேச முடியுமா...? சவால் விட்ட துரைமுருகன் - 'அன்புமணி' என்ற ஒற்றை வார்த்தையில் சோலியை முடித்த நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னை: என் மகன் கதிர் ஆனந்த் போல வேறு ஏதாவது வேட்பாளருக்கு ஆங்கிலம் பேச தெரியுமா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

திமுக சார்பாக வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டு இருக்கிறார். இவர் திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக துரைமுருகன் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று வேலூரில் துரைமுருகன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

என்னுடைய மகனுக்கு அரசியல் தெரியாமல் இல்லை. அவருக்கு நன்றாகவே அரசியல் தெரியும் . நாடாளுமன்றத்தில் பேச ஆங்கிலம் முக்கியம். ஆங்கிலம் தெரியாமல் நாடாளுமன்றம் செல்வதால் பயனே இல்லை. அதற்கு வீட்டில் சும்மாவே இருக்கலாம்.

இப்போதெல்லாம் நம் எம்பிக்கள் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் மகன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். என் மகன் என்பதற்காக சொல்ல வரவில்லை. அவன் நாடாளுமன்றத்தில் மிக சிறப்பாக ஆங்கிலத்தில் பேச போகிறான்.

வேண்டும் என்றால் சவால் வைத்துக் கொள்ளலாம். எல்லா வேட்பாளர்களையும் ஆங்கிலத்தில் பேச வைக்கலாம். ஒரு அரை மணி நேரம் பேச சொல்லலாம்.

யார் ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறார் என்று பார்க்கலாம். என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச அவர்களால் முடியுமா என்று பார்க்கலாம், என்று துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இப்படி பேசி முடித்த அடுத்த கணமே சமூகவலைதளத்தில் மீம்கள் பறக்க தொடங்கிவிட்டன. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக கட்சியை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் தொடர்ச்சியாக தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேச கூடிய வல்லமை கொண்டவர்.

துரைமுருகன் சொல்வதை போல அவர் ஆங்கிலத்தில் பேசுவதோடு மட்டுமல்லாது, அதிலும் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் பற்றி, புள்ளி விவரங்களோடு தொடர்ச்சியாக பேசக்கூடியவர்.

அப்படிப்பட்ட ஒருவர் எதிர்கட்சி கூட்டணியில் இருக்கும் போது, இப்படி வீணாக வாய் விட்டு மாட்டிக்கொண்டாரே என்று துரைமுருகனை சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no-one-can-talk-like-my-son-english-says-durai-murugan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->