அதெல்லாம் நோ பிராப்ளம்..! ஒரே அறிவிப்பால் கொண்டாட்டத்தில் அரசியல் கட்சிகள் - வெளியான அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் எனதலைமை தேர்தல் ஆணையம் கடந்த 10ஆம் தேதி அறிவித்தது. அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதனைத் தொடர்ந்து, ஊத்துக்கோட்டையில் பெரியார், காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் போர்வைகளை போர்த்தி மறைத்தனர்.

இதனை எதிர்த்து ஊத்துக்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்ஏழுமலை, ஊத்துக்கோட்டை பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர்ஷேக்தாவூத் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.

அதில், மறைந்த தலைவர்களின் சிலைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேர்தல் ஆணையத்தின், விதிமுறைகளை மேற்கோள் காட்டி இருந்தனர்.

அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் மறைந்த அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மாவட்ட நிர்வாகத்துக்கு சுற்றறிக்கை அளித்தது.

இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் தொகுதி துணைத் தேர்தல் அலுவலர் பார்வதி, தேர்தல் வட்டாட்சியர் வில்சன் உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டையில் பெரியார், காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிலைகளுக்கு போர்த்தப்பட்ட திரைகளை அதிகாரிகள் அகற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no need to hide statue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->