2011, 2016 ஆண்டு தேர்தலில் கருணாநிதி என்ன சொல்லி வெற்றி பெற்றார் தெரியுமா..? பழைய வரலாற்றை கிளறி விட்ட காமராஜ்..! - Seithipunal
Seithipunal


தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றியதே கிடையாது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட கழகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் ஆர்.காமராஜ், ஒப்பற்ற தலைவராக உள்ள நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பதற்காகவும், மதசார்பற்ற இந்தியாவை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவும் நாம் அளிக்கும் வாக்கு இருக்க வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை எதையும் நிறைவேற்றியது கிடையாது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கியுள்ளார்.

என்ன காரணத்தினால் அவர் பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கியுள்ளார் என்று தெரியவில்லை.

மு.கருணாநிதி 2011, 2016 ஆண்டுகளில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இதுதான் எனக்கு கடைசி தேர்தல் என கூறி வெற்றி பெற்றார். ஆனால் தற்போது அது நிறைவேறிவிடாது.

எந்த சக்தியாலும் கழகத்தின் வாக்கு வங்கியை சரித்து விடமுடியாது. நடைபெறவுள்ள நாகை மக்களவை, திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

வேட்பாளர்களின் வெற்றிக்கு கழகம் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no more dmk done manifesto announcements


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->