“ஜெயில்லையே உன் கதையை முடிச்சுருவேன்” – நிர்மலாதேவியை மிரட்டிய போலீஸ் – நிர்மலாதேவி வக்கீலின் பரபரப்பான பேட்டி….! - Seithipunal
Seithipunal


 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பணி புரிந்த பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை, பல பெரிய மனிதர்களுக்கு விருந்தாக்குவதற்காக, பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போதுமதுரை மத்திய சிறையில் இருக்கிறார்.

சிறையில் இருந்த நிர்மலாதேவியை அவரது வக்கீல்கள் பசும்பொன் பாண்டியன், கமலக் கண்ணன் ஆகியோர் சந்தித்தனர்.

நிர்மலாதேவியைச் சந்தித்து விட்டு வந்த வககீல்ககள் பத்திரிகை நிருபர்களிடம் பகீர் பேட்டி அளித்துள்ளனர்.

“நிர்மலாதேவி, கடந்த 10 மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டு, பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துள்ளார். இந்தப் பிரச்சினைகளினால், அவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் இழுத்துச் சென்றதால், நெஞ்சு வலி ஏற்பட்டு, கடந்த 2-ஆம் தேதி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது, சீருடை அணியாத பெண் போலீஸ் அதிகாரி அவரை மிரட்டி உள்ளார்.

“நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பத்திரிகையாளர்களைச் சந்திக்க கூடாது. வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பெயர்களைச் சொல்லக் கூடாது. வக்கீல்களையும் மாற்ற வேண்டும். அப்படி நீ செய்தால், தேர்தல் முடிந்தவுடன் நீ ஜாமீனில் செல்லலாம்.

இல்லா விட்டால், ஜெயிலுக்குள்ளேயே உன் கதையை முடித்து விடுவேன்,” என்று மிரட்டி உள்ளார், என்று அந்த வக்கீல்கள் கூறி உள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், இந்த விவகாரத்தில், பல எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியல் எங்கள் வசம் உள்ளது. அதை எப்போது, எங்கு வெளியிட வேண்டுமோ, அங்கு வெளியிடுவோம். தற்போது சிறையில், நிர்மலாதேவிக்கு பாதுகாப்பு இல்லை.

எனவே, அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என்றும் அவர்கள் கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala devi threatening by the police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->