கேரளாவில் இருந்து திருச்சி வந்த நிபா வைரஸ்..! - Seithipunal
Seithipunal


கேரளா சென்று திரும்பிய ஓட்டல் அதிபர் மனைவிக்கு நிபா வைரஸ் காய்ச்சல்…..

தற்போது, நிபா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, கேரளாவில் இந்த வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. இது வரை, 20-க்கும் மேற்பட்டோர், இந்த வைரசினால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர்.

இதனால், கேரளாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மற்றும் கேரளாவிற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த வைரசிற்கு, மருந்து கிடையாது. இது மூச்சுக் காற்றிலும் பரவக் கூடியது, என்று சொல்லப் படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தில்லை நகர், பத்தாவது குறுக்குத் தெருவில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவர்களது மகன் கார்த்திக் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக உள்ளார்.

இவர் பணி நிமித்தமாக, அடிக்கடி கேரளா சென்று வருவார். சமீபத்தில், தன் தாயாரை அழைத்துக் கொண்டு, கேரளா சென்று வந்துள்ளார். கேரளாவிலிருந்து வந்த பின்பு, ராஜேஸ்வரிக்கு, விடாத இருமல் சளி காய்ச்சல் இருந்துள்ளது.

எவ்வளவோ, மருந்துகள் வாங்கிச் சாப்பிட்டும், குணமாகவில்லை. பின் அவர், திருச்சி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவருக்கு நிபா வைரஸ் பாதித்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக, மருத்துவர்கள் சொல்கின்றனர்.

டீன் அனிதா தலைமையிலான குழு, இவரைத் தீவிரமாகப் பரிசோதித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nifa verus attack in trichy girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->