சேலம் போன்றே வேண்டும்..! கேட்டு வாங்கிய திமுக..!! அடுத்த 08 வழி சாலை அறிவிப்பு..!!! - Seithipunal
Seithipunal


சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டசபையில் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ''மதுரை முதல் தஞ்சை வரை இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைய உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன். திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே அமைய உள்ள 6 வழி சாலை திட்டத்தை குறிப்பிட்டவுடன்,  தொடர்ந்து பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே 6 வழி சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பு பணி முடிந்துவிட்டது. உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன். இனி அதை பற்றி தயவுசெய்து பேச வேண்டாம்'' என தெரிவித்தார்.

மேலும், திமுகவின் கொறடா சக்கரபாணி சேலத்தில் உள்ள மக்களுக்கு கொடுத்தது போலவே, இனி நில எடுப்பின்போது தமிழகம் முழுவதும் இதேபோல் இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கப்படுமா? என கேட்டார். இந்த கேள்விக்கு பதிலுரை கொடுத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ரோடு போடுவதற்காக மக்களை ரோட்டில் விடாது இந்த அரசு. 

தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் புதிய நில எடுப்பு சட்டத்தின் படி இழப்பீடு வழங்கப்படும். தமிழக மக்களை மூளை சலவை செய்து அரசின் திட்டங்களை பற்றி தவறாக சித்தரித்து எதிர்ப்பை உண்டாக்க நினைக்கிறார்கள். அவர்களின் முயற்சி பலிக்காது. சேலத்தை தொடர்ந்து, மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைய உள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next 8 way road in thnjai to madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->