தமிழகத்தில் உதயமாகிறது புதிய தாலுக்கா.! ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


2019- 2020-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (தமிழக பட்ஜெட்) தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டமன்றம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளாக, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு. நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு. மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு. வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு. ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு. சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.3,985 கோடி நிதி ஒதுக்கீடு. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையும், நிரந்தர ஊனத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படும்.

சிறுபான்மையினர் நலத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை (பேட்டரி பேருந்து) இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிரடியாக பட்ஜெட் தாக்களில் அறிவித்துள்ளார். மேலும், சத்துணவு திட்டத்திற்கு ரூ.1772.12 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.18,273 கோடி, மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர்கள், புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி, நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ.18,700 கோடி, ரூ.2000 கோடியில் சென்னையில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEW TALUK IN TAMILNADU


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->