கோவாவில் விதிக்கப்பட்ட புதியகட்டுப்பாடு !! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களில் மிக முக்கியமாக இருப்பது, கோவா தான். வெளிநாட்டினர் பலரும் விரும்பி வரும் இடம் இதுவாகத்தான் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 40 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். 

கோவாவில் மது அருந்துவது முக்கிய பொழுது போக்காக அமைந்துள்ளது. மேலும், இங்கு மதுவின் விலையின் குறைவாக இருக்கும். ஆனால், சில ஆண்டுகளாக அங்கு அசைவம் சமைத்து உண்டுவிட்டு பல பயணிகள் மது அருந்திவிட்டு தகராறு செய்து வருகின்ற்னர்.

இது கோவாவின் அமைதியையும், அழகையும் குறைப்பதாய் அமைந்துள்ளது. இதையடுத்து இந்த பிரச்சனைகளை குறைக்கும் விதமாக கோவா அரசு நடவடிக்கை எடுக்க முயன்றுள்ளது. நேற்று முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில் கோவா மாநில சட்டசபை கூட்டம் நடந்தது.

அதில் சுற்றுலா சட்டத்தில் திருத்தும் செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டது. அதன்படி, இனிவரும் காலங்களில் கோவா கடலோரத்தில் அசைவம் சமைத்தாலோ, மது அருந்தினாலோ ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சட்டம் பிறப்பித்தது.

கோவா மற்றும் பொது இடங்களில் குடித்துவிட்டு தகராறு செய்ப்பவர்களுக்கு 3 மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உல்லாச பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new rules in goa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->