ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதை….! மகிழ்ச்சியில் மக்கள்…! - Seithipunal
Seithipunal


 

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில், ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி வரை, ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. அங்கிருந்து போட் மெயில் மூலமாக, இலங்கைக்கு கப்பலில் செல்லும் வசதியும் அப்போதிருந்தது.

1964-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலினால், தனுஷ்கோடி நகரமே சின்னாபின்னமானது. அதன் பிறகு, ராமேஸ்வரம் வரையில் தான் ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது. காசி, ராமேஸ்வரம் யாத்திரை மேற் கொள்பவர்கள், தனுஷ்கோடி சென்று தான், தங்களது, தீர்த்த யாத்திரையை முடிக்கிறார்கள்.

தற்போது அரிச்சல் முனைக்கு, தார்ச்சாலை போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடிக்கு, 208 கோடி ரூபாய் செலவில், புதிய ரயில் பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டம், தற்போதைய நிதி ஆண்டிலேயே துவங்கவும், வழி வகை செய்துள்ளது.

அதனால், இந்த ரயில் பாலத்தை விரைந்து முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் பாதை அமைக்கப் பட்டால், தனுஷ்கோடி வரை அனைத்து ரயில்களும் இயங்கும்.

இதனால், ராமேஸ்வரத்திற்கு, தீர்த்த யாத்திரை செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தனஷ்கோடி சிறந்த சுற்றுலாத் தலமாக இருப்பதால், அனைத்து தரப்பு மக்களும், இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new railway track to Dhanushkodi from Rameswaram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->