பாம்பனில், அமையவிருக்கும், இரு வழித்தட புதிய ரயில் பாலம்..! நவீன தொழில் நுட்பத்தில் புதிய துாக்குப் பாலம்…! - Seithipunal
Seithipunal


 

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து மண்டபம் வரை உள்ள 2.5 கி.மீ. துாரத்திற்கு, 104 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில், ரயில் பாலம் போடப்பட்டது. இந்தியாவின் முதல் ரயில் பாலமும் இது தான்.

இதன் வழியே சரக்கு கப்பல்கள் செல்லும் போது, பாம்பன் ரயில் பாலத்தில், உள்ள ஷெர்ஜர் துாக்கு பாலம் கப்பல் செல்ல வழி கொடுக்கும். ஆனால், இந்த துாக்கு பாலத்தின் பீம் ஒன்றில் விரிசல் விட்டுள்ளது. இதனால், இந்த பாலத்தின் வழியே ரயிலை இயக்குவதும் சிரமமாக இருந்ததால், கடந்த 5-ஆம் தேதி முதல், ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

நுாறு ஆண்டுகளைக் கடந்து விட்டதால், தற்போது, இந்த ரயில்வே பாலமும் வலுவிலந்து வருகிறது. இதனால், இந்தப் பாலத்தை விட ஆறு மீட்டர் உயரத்தில், ஒரு புதிய ரயில் பாலம் கட்ட, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, “வெர்டிகிள்” துாக்குப் பாலமும் அமைய உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக, ரயில்வே அமைச்சகம் 250 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new railway bridge in Pamban


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->