தமிழக அமைச்சர் போட்ட உத்தரவு! ஆந்திராவுக்கு விரைந்த அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


வரும் 15, 16-ம் தேதிகளில் புயல் வருவது குறித்த வானிலை எச்சரிக்கை அனைத்து மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

நாகை, காரைக்கால், கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ப்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக கடல் அலை 2.5 மீட்டர் முதல் 4.5 மீட்டர் வரை மேல் எழும்பக் கூடும், இதனால் 12ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் அருகே உள்ள துறைமுகத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 321 படகுகள் ஆழ்கடலில் உள்ளது, அவை விசாகப்பட்டினம், கிருஷ்ணபட்டினம் அருகேயுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல்படையின் சாரங்க் கப்பல் மற்றும் கப்பற்படை மூலம் ஆழ்கடல் படகுகளுக்கு தகவல் தறிவிக்கப்பட்டு வருகிறது, ஆந்திராவில் தமிழக மீனவர்கள் தங்க ஏற்பாடு செய்து தர, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இந்த பணிகளை ஆய்வுசெய்ய தெலுங்கு பேசும் 3 அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new cyclone in minister jayakumar press meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->