10 ரூபாய் சில்லறையில் சிறப்பான தொழில், கொள்ளை லாபம் பார்க்கும் தருமபுரி வியாபாரிகள்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசால் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த நாணயங்களை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடையே கொடுக்கல் வாங்கலில் புழக்கத்தில் உள்ளது. வியாபாரிகளும், நடத்துனர்களும் வாங்கிக் கொள்கிறார்கள். 

ஆனால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவது கிடையாது. மக்களிடையே புழக்கத்தில் இல்லாமல் அப்படியே தங்கிவிட்டது. குறிப்பாக தருமபுரி மாவட்டம் கடத்தூர், பொம்மிடி, பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை, ரேசன் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. 

இதேபோல மின் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் உள்பட  எங்கும் நாணயங்களை கொடுத்தாலும் வாங்குவதில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளிலும் கூட வாங்க நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.

இதேபோல பெட்டிகடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத் தும் வியாபாரிகளும் இதை வாங்க மறுக்கிறார்கள். தற்போது இந்த வாய்ப்பை பயன்படுத்தி பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகள்  இந்த நாணயங்களை  கமி‌ஷனுக்கு வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகள் 10 ரூபாய் நாணயத்தை ரூ. 2  கமி‌ஷனுக்கு வாங்கி வருகிறார்கள். ஒரு சிலர்  5 ரூபாய் வரை கமி‌ஷன் கழித்து இந்த நாணயங்களை வாங்கிக் கொள்கிறார்க்ள.

இந்த புது தொழில் வியாபாரிகளுக்கு கைகொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்கும் வியாபாரிகள் சென்னையில்  இதை மாற்றிக் கொள்கிறார்கள். மேலும் சிலர் தருமபுரி வந்து வங்கிகளில் மொத்தமாக 50 முதல் 500 நாணயங்கள் வரை கொடுத்து மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணம் அந்த பகுதி மக்கள் அந்த நாணயங்கள் செல்லும் எனபதை நம்பாததே ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new business in dharmapuri using 10 rs coin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->