வளர்மதிக்கு "பெரியார் விருது"....ஜூலி நடிக்கும் படம் பேரு "உத்தமி" - வெச்சி செய்யும் நெட்டிசன்கள்! - Seithipunal
Seithipunal


வளர்மதிக்கு "பெரியார் விருது"....ஜூலி நடிக்கும் படம் பேரு "உத்தமி" - வெச்சி செய்யும் நெட்டிசன்கள்!

தமிழக அரசின் 2017ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வரும் நிலையில் 2017-ம் ஆண்டிற்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 
அறிவித்தார். 

இதன்படி பெரியார் விருது இலக்கிய வளர்ச்சிக்கு அன்றாடம் உழைத்து பெரும் தொண்டாற்றி பெருமை சேர்த்தமைக்காக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருது பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் வழங்கப்படும்

இந்த விருது வளர்மதிக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து கிண்டல் செய்து வரும் நெட்டிசன்கள், பெரியாரை இதைவிட கேவலப்படுத்தமுடியாது என்று கிண்டலடித்து வருகின்றனர். 

அதேபோல்,ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷம் போட்டதன் மூலம் வீர தமிழச்சி என வர்ணிக்கப்பட்ட வர் ஜூலி என்ற ஜூலியான.ஜல்லிக்கட்டு புகழ் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கமல்ஹாசன் வாய்ப்பு வழங்கினார்.  

இந்த நிகழ்ச்சி மூலம் அவரின் பொய் பித்தலாட்டம் வெளிஉலகிற்கு தெரிய வந்தது.இதனால் அனைவராலும் அருவருப்பாக பார்க்கப்பட்ட நிலையில்,எதனையும் பொருட்படுத்தாத ஜூலிக்கு பிரபல  தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. 

கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஈன மானத்தை விட்டு பற்றிக்கொண்ட ஜூலி தற்போது தமிழ்ப் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கு 'உத்தமி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.நடத்தைக்கு  டைட்டிலுக்கு சம்பந்தம் இல்லாத ஜூலி அந்த படத்தில் சமூக சேவகராக நடிப்பதாக அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில்,தனது தகுதியை கொஞ்சமும் தர நிர்ணயம் செய்யாமல்  பெரியார் விருது பெரும் வளர்மதியையும்,சம்பந்தமே இல்லாமல் உத்தமி படத்தில் நடிக்கும் ஜூலியையும் தர நிர்ணயம் செய்துவரும் நெட்டிசன்கள் இவர்கள் இருவரையும் வெச்சி செய்துவருகின்றனர்.  

அதில் சில.,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nettizen stroll julie and pa valarmathi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->