23 பேரை பலிகொண்ட குரங்கணி தீவிபத்து! வழக்கை முடித்துவைத்த தேசிய பசுமை தீர்ப்பாயம்.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் போடி அருகில் குரங்கணி காட்டு பகுதியில் மலையேற்றத்திற்க்காக கடந்த மார்ச் மாதம் 11 ம் தேதி 27 பேர் சென்றனர். இந்நிலையில் அப்போது எதிர்பாராத விதமாக கட்டு தீ ஏற்பட்டு அதில் 23 பேர் உயிர்ழந்தனர்.

இதனையடுத்து தீ விபத்து பற்றி அறிக்கையளித்த தமிழக அரசு மலையேற்றத்திற்கு சென்றவர்கள் முறையான அனுமதி இன்றி சென்றதால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

இதனால், அந்த மலையேற்றத்தை நடத்திய சென்னையை சேர்ந்த ட்ரெங்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வான் கெய்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Image result for குரங்கினி தீ விபத்து

இது குறித்து பீட்டர் வான் கெய்ட் தெரிவிக்கையில்,  நாங்கள் முறையான அனுமதி பெற்றே மலையேற்றத்திற்கு அழைத்து சென்றோம், வனத்துறையினர் அளித்த அனுமதி சீட்டு ,பணம் கட்டிய ரசீது  அனைத்தும் மலையேற்றத்திற்கு அழைத்து சென்ற எங்கள் 4 ஊழியர்களிடமே இருந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக அவர்கள் 4 பேரும் 23 பேருடன் சேர்ந்து இறந்துவிட்டனர். இதனால் அந்த அனுமதி சீட்டும் அவர்களுடன் சேர்ந்து போய்விட்டது. நான் எந்த மலையேற்றத்திற்கும் தலைமை வகிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்த தீ விபத்து குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில், விசாரணை அதிகாரியாக வருவாய் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டு இருந்தார்.  

Image result for பீட்டர் வான் கெய்ட் மீது வழக்குப்பதிவு

இதுகுறித்து விசாரணை முடிந்த நிலையில், வருவாய் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா இன்று தமிழக அரசிடம் முழு அறிக்கையை தாக்கல் செய்தார். 

குரங்கணி தீ விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கையை, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியிடம் தாக்கல் செய்தார் விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா.

இந்நிலையில், இந்த வழக்கு முடித்துவைப்பதாக சற்றுமுன் (17.07.2018) தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் நியமிக்கபட்ட அதிகாரி அதுல்ய மிஸ்ராயின் நெறிமுறைகளை பின்பற்றுமாறும், இது சம்மந்தமாக 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NATIONAL GREEN TRIBUNAL NEW JUDGEMENT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->