இவங்கள கேக்க யாரும் இல்லையா..? சத்குரு விழாவிற்காக இரவில் பறக்கும் தேசியக்கொடி..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் காங்காபுரம் அருகே அமைந்துள்ளது டெக்ஸ்வேலி. ஜவுளி விற்பனைக்கு என்றே தமிழ்நாட்டிலேயே தொடங்கப்பட்ட முதல் மால் போன்ற அமைப்பாகும். தினமும் ஆயிரக்கணக்கான மக்களும், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து மொத்தமாக ஜவுளி ரகங்களை  இங்கிருந்து கொள்முதல் செய்துகொள்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பாக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த ஈஷா கிராமோத்சவ் விளையாட்டுத் திருவிழாவின் இறுதிப் போட்டிகள், ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்றன.

அப்போது மாநிலம் முழுவதிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழா இரவு வரை தொடர்ந்தது. இந்த வேளையில் டெக்ஸ்வேலி வளாகத்தில் பறக்க விடப்பட்டிருந்த பிரம்மாண்ட தேசியக்கொடி இருள் சூழ்ந்த நேரத்திலும் இறக்கப்படாமல் தொடர்ந்து பறந்து கொண்டே இருந்தது.

தேசிய கொடியின் விதிகளை பற்றி அறிந்த சிலர் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் வாங்கிய இந்த 71 ஆண்டுகளில் நாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போது பொதுமக்கள் வீடு, அலுவலகம் மற்றும் கார் போன்ற இடங்களில் தேசியக்கொடியை வைக்க அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், இன்னும் பெரும்பாலான மக்களுக்குதேசியக்கொடி விதிகள் தெரியாது.

தேசியக்கொடி அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 பிரிவு 2ன் படி, தேசியக்கொடியை இழிவுபடுத்தும் வகையில் செயல்கள் மேற்கொண்டால் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது என்று தெரிவித்துள்ளது.

இப்படியிருக்க தேசிய கொடியை சூரிய உதயத்திற்கு பின்புதான் ஏற்ற வேண்டும். அதேபோல, சூரிய அஸ்தமனம் ஆவதற்கு முன்பு அதாவது மாலை 6மணிக்குள் இறக்க வேண்டும் என்ற விதிமுறையை கடைபிடிக்காமல் இரவு நேரத்திலும் தொடர்ந்து பறக்கவிட்டது சமூகஆர்வலர்களுக்கு அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

national flag still on poll erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->