2 லட்சம் பேர் உறுதி.. தமிழக அரசியலை பரபரப்பிற்குள்ளாக்கும் அறிவிப்பு..? நடக்கப்போவதை அறிவித்த அதிமுக அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


தேனியில் வருகிற 13-ந்தேதி நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர், முதல்வர் பேசுகிறார்கள். இதில் 2 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்ற தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இப்படிப்பட்ட துரோகிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நேரம் நமக்கு வந்து விட்டது.

புரட்சித்தலைவர் தோற்றுவித்த சின்னத்தை அழிக்க நினைக்கும் இந்த துரோகிகளின் தீய எண்ணங்களை வாக்காளர்களிடம் நீங்கள் எடுத்துக்கூற வேண்டும். அது மட்டுமல்லாது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்த வெளியூர்க்காரரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அவர் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இதுபற்றியும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

வருகின்ற 13-ந்தேதி ஆண்டிபட்டியில் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து பாரத பிரதமர் மோடிஜி மற்றும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதில் கன்னியாகுமரி, கரூர், விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்த கழக கூட்டணி வேட்பாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த பிரச்சார கூட்டத்தில் ஏறத்தாழ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றியினை பெற்று ப.ரவீந்திநாத்குமார் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

narendra-modi-palaniswami-on-same-stage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->