நாமக்கல்லில் நேற்று நடந்த சம்பவம் விபரீதமானது - ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் திடீர் மரணமா..? - Seithipunal
Seithipunal


நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்துவிட்டு கீழே இறங்க முயற்சித்த அர்ச்சகர் தவறி விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோவில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது.

இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி அளிக்கிறார்.

18 அடி உயரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட திருவுருவமாகவும், இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலைகளில் ஒன்றாகவும் உள்ளது, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை.

நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் உள்ள ஆஞ்சநேயருக்கு கோபுரம் அமைக்கவில்லை. வெயிலிலும், மழையிலும், காற்றிலும் பொலிவு மாறாமல் காட்சி அளிக்கிறார். அவர் வீற்றிருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்ய 8 அடி உயரத்திலாலான ஏணி போன்ற மேடை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மேடையில் அர்ச்சகர் ஏறி ஆஞ்சநேயருக்கு அபிஷேகத்தை முடித்துவிட்டு கீழே இறங்க முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்தார்.

சுமார் 8 அடி உயரத்திலிருந்து விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலத்தில் உள்ள நியூரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அர்ச்சகர் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

namakkal-anjaneyar-temple-archana


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->