எதிர்க்கட்சி என யாருக்குமே அஞ்சாதவர்கள், தற்போது நடுநடுங்குகிறார்கள்..? கட்டண உயர்வால், தலைவலி அரசுக்கே, உடும்பு பிடியாக மாணவர்கள்..! - Seithipunal
Seithipunal


1996 முதல் 2017 வரை ஒட்டுனர், நடத்துனர்களிடம் அபராதமாக வசூலித்த தொகை மட்டும் ரூ 40,000 கோடி, அந்த பணம் மாயம்?, அது எங்கே?

கடந்த 5 வருடத்தில் ரூ 1000 கோடிக்கு வாங்கிய 3631 ஒடாத பேருந்துகளை விற்று ரூ 51 கோடி தான் தேரியது!!!

எலக்டாரினிக் டிக்கெட் மெசினில் மட்டும் ரூ 300 கோடி வருடா வருடம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது!!!

பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை முழுவதும் நிறைவேற்றி, தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தை வருடம் தோறும் ரூ 1000 கோடி லாபத்தை ஈட்ட முடியும் என்கிறார்கள் இந்த துறையில் வல்லுனர்கள்..

ஊழல் மிகுந்த அரசின் மற்றொரு கொள்ளையே பேருந்து கட்டண உயர்வு என்று கூறியுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழகம் முழுவதும் வலுவானகண்டன இயக்கம் நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் தமிழக அரசு இனிமேல் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கான அதிகாரத்தை அரசு அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.

அதிமுக அரசின்ஊழல் நிறைந்த ஆட்சி, அரசு போக்குவரத்து துறைக்கு தேவையான நிதியை ஒதுக்காதது, திட்டமிட்டு நிர்வாகத்தை நடத்தாதது, மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை பெறாமல் இருப்பது போன்றவற்றால்தான் போக்குவரத்துத்துறை கடும் நஷ்டமாகியுள்ளது.

அரசின் பொறுப்பின்மையை மக்கள் தலையில் திணிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திரும்பப்பெறும்வரை தமிழகம் முழுவதும் வலுவான போராட்டத்தை நடத்திட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தற்போது நாகை, கன்னியாகுமரி, தஞ்சை போன்ற பகுதிகளில் தற்போது மாணவர்கள் தீவிரமாக போராட்டங்களை செய்து வருகின்றனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nagai and kanniyakumari students involved in protest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->