ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஒருபுறம் கொள்ளையர்களை விரட்ட!. ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்!. - Seithipunal
Seithipunal



சிலை மோசடியில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி தராமல் ஓயமாட்டேன் என  ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தீவிரமாக களமிறங்கி அசத்திக்கொண்டிருக்கும் நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே டோல்கேட் கோமூட்டியூர் பகுதியில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் சண்முகம் என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் பூசாரி சண்முகம் இரவு பூஜையை முடித்துவிட்டு, கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று காலை கோவிலை திறப்பதற்காக சண்முகம் வந்துள்ளார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அறையில் பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. 

மேலும் அம்மன் கழுத்தில் இருந்த 10 பவுன் நகை, 3 கிலோ எடையுள்ள ஐம்பொன் அம்மன் சிலை, 1 கிலோ எடையுள்ள அம்மன் வெள்ளி சிலை ஆகியவற்றை திருடியுள்ளனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

                         

உண்டியலை எடுத்த மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு, கோவில் அருகில் உள்ள நிலத்தில் உண்டியலை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

அதேபோல், கோவிலுக்கு அருகே உள்ள விவசாயி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து, அதில் இருந்த பணம் நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mystery people have robbed Quintet statue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->