உடனடியாக ரூ.40 ஆயிரம்.. நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு - அதிரடித்த அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


துப்புரவு பணியாளர்களுக்கு வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் வீடு கட்டித்தரப்படும் என்று கடலூரில் கூறினார் தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய உறுப்பினர்.

தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ்கிர்மானி கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப்பகுதியில் ஆய்வு மேற்கொண் டார்.

அதன்படி, கடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு நடத்தி சுகாதாரமாக பராமரிக்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்தார். மேலும், அங்குள்ள கழிவறை அசுத்தமாக இருப்பதைப் பார்த்து அதற்கு பொறுப்பான 2 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி துறையினர், மருத்துவத்துறையினர், துப்புரவு பணியாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் 7 துப்புரவு தொழிலாளர்கள் புதைசாக்கடையின் ஆளிறங்கும் குழிக் குள் இறங்கி சுத்தம் செய்தபோது இறந்துள்ளனர்.

இவர்களில் 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் 1 வாரத்திற்குள் வழங்க வேண்டுமென உத்தரவிடப் பட்டுள்ளது. மாவட்டத்தில் கழிவுகளை மனிதர்களே கைகளால் அள்ளும் நிலை இல்லையென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள் ளது.

ஆனால், ஆய்வின் போது அந்த நிலை இருப்பதை கண்டுகொண்டேன். எனவே, கழிவுகளை கைகளால் அள்ளும் நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கு உடனடியாக ரூ.40 ஆயிரமும், அவர்களின் மறுவாழ்வு நிதியாக இயந்திரம் வாங்குவதற்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட வேண்டும்.

துப்புரவுப் பணியில் ஈடுபடும் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அவர்களுக்கான கல்வி கடன், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ வசதி ஆகியவை செய்துத்தரப்பட்டிருக்க வேண்டும்.

இதனை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.கடலூர் நகராட்சியில், துப்புரவு பணியில் ஈடுபடுவோருக்கு ரூ.360 சம்பளமாக ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும் நிலையில் அவர்கள் ரூ.200 மட்டுமே வழங்குகிறார்கள்.

எனவே, அந்த ஒப்பந்தத்தாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.ஒப்பந்தத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட தமிழக முதல்வர் மற்றும் தலைமைச்செயலக அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

சுகாதாரப்பணிகளில் ஈடுபட்டு வருவோருக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்குள் இப்பணியில் ஈடுபடுவோருக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்கப்படும்.

அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் ஆணையத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட நிதி மேலாண்மை வாரியம் தமிழகத்தின் தாட்கோ மூலமாக கடன் வழங்கி வருகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து நகராட்சிகளிலும் ஆள்இறங்கும் கழிவுக்குழிகளில் மனிதர்கள் இறங்காத நிலையை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அடுத்த மாதம் மீள் ஆய்வு செய்யப்படும். அதில் ஏதாவது குறைபாடு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Municipal-Cleaners-Staff-road-picket


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->