ரஜினி மற்றும் விஜயகாந்த் படத்தில் நடித்த வில்லன் மர்ம மரணம்.! அஞ்சலி செலுத்த விரையும் திரையுலகம்.!! கண்ணீரில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய திரையுலகின் பிரபல நடிகரும்., வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் மகேஷ் ஆனந்த் (வயது 57). இவர் 1980 ம் வருடம் மற்றும் 1990 ம் வருடங்களில் பாலிவுட் திரையுலகின் பிரபலங்களான அமிதாப் பச்சன்., தர்மேந்திரா., கோவிந்தா மற்றும் சஞ்சய்த் நடிகர்களுடன் நடித்துள்ளார். 

இவர்களுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த காரணத்தால் அன்றைய சமயங்களில் இவர் அதிகளவு பேசப்பட்டு., புகழ்பெற்றவர். தமிழ் திரையுலகில் விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

திருமணம் முடிந்து தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டு இவருக்கும்., இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்கள் இருவரும் கடந்த 2002 ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். 

தனது மனைவியிடம் இருந்து பிரிந்த இவர் மும்பையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது இல்லத்தில் பெண் ஒருவர் வீட்டு வேலை பார்ப்பது வழக்கம். 

அந்த வகையில்., இன்று காலை வீட்டு வேலைக்காக மகேஷின் இல்லத்திற்கு சென்ற பெண் கதவை தட்டியும் அவர் திறக்காததால்., சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., உயிரிழந்த நிலையில் அவர் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

அவரது உடலை மீட்ட காவல் துறையினர் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai famous actor died in her house with play opposite character rajinikanth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->