கோவையில் இறந்த மாணவிக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர், 5 லட்சம் மாணவ்ர்களை ஏமாற்றியுள்ளாரா?. அவர் அடித்த பணம் 2.5 கோடியா!. பரபரப்பு தகவல்கள்!. - Seithipunal
Seithipunal


 

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பயிற்சியின்போது மாணவி மரணமடைந்த நிலையில், அந்த பயிற்சியாளர் கடந்த 6 ஆண்டுகளில் மாணவர்களை ஏமாற்றி ரூ.2 கோடியே 50 லட்சம் வரை வசூலித்திருப்பது தெரிய வந்துள்ளது.

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் நரசிபுரம் கல்லூரியில், நேற்று முன் தினம் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது லோகேஸ்வரி எனும் மாணவி பலியான சம்பவம், தமிழகத்தையே உலுக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர் போலி பயிற்சியாளர் என்பது தெரிய வந்தது. தற்போது விசாரணையில் ஈடுபடுத்தப்படும் போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல மாணவ-மாணவிகளுக்கு அவர் பேரிடர் மேலாண்மை அமைப்பின் அனுமதி பெறாமலேயே பயிற்சியளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலை பார்ப்பதாக தெரிவித்து பல பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

போலி சான்றிதழ்களை காண்பித்து கடந்த 6 ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும் 1,275 பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்துள்ளார். இவர் இதற்காக கல்வி நிறுவனங்களிடம் பணம் ஏதும் பெறவில்லை ஆனால், பயிற்சி முடிந்த பின்னர் மாணவ-மாணவிகளிடம் இருந்து தலா ரூ.50 வசூலித்து கொண்டு போலியாக சான்றிதழ் வழங்கியுள்ளார்.

 இதேபோல் கடந்த 6 ஆண்டுகளில் 5 லட்சம் மாணவர்களிடம் ரூ.2 கோடியே 50 லட்சம் வசூலித்து இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் இவருக்கு பின்னால் பெரிய கும்பல் செயல்படுவதும் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணையில் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு பின்னால் பெரிய கும்பல் இருப்பதால் விசாரணை தொடருமா என்ற கேள்வி மக்களிடையே நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More than 2 crore collected trainer cheating students


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->