வயதான பெண்ணிடம் நுாதன முறையில் ஏடிஎம் நம்பரைப் பெற்று, பணம் மோசடி.! - Seithipunal
Seithipunal


அடிக்கடி தேசிய வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வரும். அதில், “வங்கி உங்களுடைய ஏடிஎம் எண்ணையோ, வேறு கணக்கு பற்றிய விபரங்களையோ கேட்காது. அதனால், யாரிடமும் ஏமாற வேண்டாம்” என்று, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளருக்கும் தகவல் போய் விடும்.

ஆனால், பாவம் பாமர மக்கள் தான், இந்த விஷயத்தில், கயவர்களால் ஏமாற்றப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி காதர்பிச்சை தெருவைச் சேர்ந்தவர் மரியம்பீவி (வயது 67). கணவனை இழந்தவர். மகனுடன் வசித்து வருகிறார். இவர் இளையான்குடியில் உள்ள அரசு வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்.

கடந்த 13-ஆம் தேதி, இவருடைய செல்போன் நம்பருக்கு ஒருவர் பேசி உள்ளார். “நான் வங்கி மேனேஜர் பேசுகிறேன்” என்றார். உடனே, மரியம்பீவி, செல்போனை, தனது பேத்தியிடம் கொடுத்து, என்ன விபரம் என்று கேட்கச் சொல்லி இருக்கிறார்.

அடுத்து பேசிய அந்த நபர், “வங்கியில் உங்கள் கணக்கு லாக் ஆகியிருக்கிறது. இப்போது உங்கள் செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி. நம்பர் வரும். அந்த நம்பரையும், உங்களது ஏடிஎம். நம்பரையும் தெரியப் படுத்தவும்” என்று கூறி உள்ளார்.

அதனை நம்பி, அவரும், செல்போனுக்கு வந்த ஓடிபி நம்பரையும், ஏடிஎம். நம்பரையும் கூறினார். அதனை அடுத்து, மதியம், வங்கியிலிருந்து மரியம் பீவி செல்போனுக்கு ஒரு செய்தி வந்தது.

அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து, 33 ஆயிரம் ரூபாய் எடுக்கப் பட்டதாக, குறிப்பிடப் பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மரியம்பீவி, இளையான்குடி போலீசில் புகார் அளித்தனர்.

கொஞ்சம் அசந்தா, ஆளையே காணாமல் செய்து விடுவார்கள் போல் இருக்கிறது. இந்த செய்தியைப் படித்த பிறகாவது, எச்சரிக்கையாக இருங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

money robbery at atm for elder lady


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->