அரசு பள்ளியில் நுழைந்த மர்ம நபர்கள்..! புத்தகங்களை தீயிட்டு கொளுத்தி அட்டூழியம்..!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம், தக்கலைக்கு அருகே உள்ள திருவிதாங்கோடு என்னும் ஊரில் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி ஆகிய இரண்டும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவிதாங்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து படித்து வருகின்றனர்.
 
மேலும், இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு, ஒவ்வொரு வகுப்பறையிலும், புத்தகங்கள் மற்றும் செய்முறை பயிற்சி ஏடுகளை வைப்பதற்கு தனித்தனி பீரோக்கள் உள்ளன. இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து, பள்ளியை திறந்தனர். அப்போது 5–ஆம் வகுப்பு அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். 

உள்ளே சென்று பார்த்த போது, வகுப்பறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் மற்றும் செய்முறை பயிற்சி ஏடுகள் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தன. யாரோ மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அருகில் உள்ள பரிசோதனை கூடத்தின் அறையின் பூட்டையும் உடைத்துள்ளனர். ஆனால் அங்கு எந்தப் பொருட்களும் இல்லாததால் மர்ம நபர்கள் அப்படியே விட்டுவிட்டனர். 

அதைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர்கள் சத்துணவு கூடத்தில் வைத்திருந்த முட்டையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அது மட்டுமின்றி, பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட கேண்டீன் கதவை உடைத்து அங்குள்ள பொருட்களையும் சேதப்படுத்தி, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இதுகுறித்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பியூலா ஹலன் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்லத்துரை ஆகியோர் தக்கலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Money laundering at government school The mystery people set fire to books


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->