சத்குரு விரைவில் குணமடைவார் - மனமுறுகிய பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா மையத்தின் நிறுவனராக இருப்பவர் சத்குரு ஜக்கி வாசுதேவன். இங்கு பிரமாண்டமாக இருக்கும் ஆதியோகி சிலையை காண்பதற்காக ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். 

அந்த வகையில், சமீபத்தில் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு கலந்து கொண்டார். மேலும், சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக சத்குரு ஜக்கி வாசுதேவனுக்கு கடந்த சில நாட்களாக ஒற்றை தலைவலி இருந்துள்ளது. 

கடந்த 14ம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதோடு, அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு, கடுமையான வாந்தி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஜாக்கி வாசுதேவ் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, மூளையின் ஒருபகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருந்த ரத்தக்கசிவை சரி செய்தனர்.  தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சத்குரு பேசியப்படி வீடியோவும் வெளியானது. இந்த நிலையில், பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்குருவை தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்தார். 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ”சத்குருவிடம் பேசினேன். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், விரைவில் குணமடைய வாழ்த்தினேன்" என்று தெரிவித்திருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi tweet about sathguru jakki vasudev


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->