இராணுவபடையினரை அவமதிக்கிறது காங்கிரஸ்!! வெளியான தகவலால் பரபரப்பு!!  - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், "எதிர்கட்சிகள் ஜம்முகாஷ்மீரை பிரிக்க முயலுகின்றனர். காங்கிரசும், காஷ்மீரில் வாரிசு அரசியல்வாதிகளும் இந்தியாவை இரண்டாக பிரிக்க முயற்சிக்கின்றனர்.

இந்தியாவை பிரிக்க அனுமதிக்க மாட்டோம். வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. காஷ்மீரை காங்கிரஸ் பின்னோக்கி இழுத்து செல்ல முயற்சிக்கிறது. 

பயங்கரவாதிகளுடன் காங்கிரஸ் நிபந்தனையற்ற பேச்சு நடத்த தயாராக இருக்கிறது" என்றும், "காங்கிரஸ் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. வறுமையில் வாழ்வோர் குறித்து காங்கிரஸ் இப்போது பேசுகிறது. 

60 ஆண்டுகளாக என்ன செய்தார்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை காங்கிரஸ் குறைகூறுகிறது. இது நமது படையினரை பழிப்பது போலாகும்" என்றும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi says about congress


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->