மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தற்பொழுது பிரதமர் மோடி!! குவியும் தொண்டர்கள்!!  - Seithipunal
Seithipunal


வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கலந்துகொண்டார். அதேபோல், இன்று மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளார். 

இதற்காக கேரளாவிலிருந்து நேற்றிரவு 10 மணியளவில், விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அவரை துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிலையில், தேனியில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அத்துடன், பிரேமலதா விஜயகாந்த், முதல்வர், ஜான் பாண்டியன், செல்லூர் ராஜு, பொன் . ராதாகிருஷ்னன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi in madurai andipatti


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->