10 ஆண்டு மோடியின் "ட்ரைலர்" ஆட்சி..1 லட்சம் விவசாயிகள் மரணம்.!! - Seithipunal
Seithipunal


வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தினர். நடந்த துப்பாக்கி சுட்டில் சுப்கரன் சிங் என்ற விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது அஸ்தி விவசாய சங்கங்கள் மூலம் நாடு முழுவதும் யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டு ஆங்காங்கே உள்ள கடல்களில் கரைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சுப்கரன் சிங் அஸ்தியின்  ஒரு பகுதியாக விவசாய சங்கங்களின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் பி ஆர் பாண்டியன் தலைமையில் டெல்லியில் இருந்து நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கொண்டுவரப்பட்ட அஸ்தி பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை பெர்சன் நகர் கடலில்  கரைக்கப்பட்டது.

இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ஐயாகண்ணு பேசுகையில், மோடியின் இந்த பத்து ஆண்டுகால ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேர்தலுக்கு பின்னர் 21ஆம் தேதி விவசாய சங்கங்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் கூறினார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi government one lakh farmers death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->