விரோதமான இந்த திட்டத்தை அதிமுக அரசு உடனடியாக கைவிடவேண்டும் ! அதிரடி அறிக்கை விடுத்த மு.க. ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


5-ம் மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தவேண்டும் என அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் 5-ம் மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்று கூறி பெற்றோரும் இளம் மாணவ-மாணவியரும் அதிர்ச்சியில் மன அழுத்தத்தினால் அல்லலுறும் வகையில், அ.தி.மு.க அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே அடிமைத்தனமாக நகல் எடுத்து அட்சாரம் பிசகாமல் அ.தி.மு.க அரசு செயல்படுத்துவது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சராக உள்ள செங்கோட்டையன் ஆகியோரின் “குதர்க்க மனப்பான்மை”யைப் பிரதிபலிக்கிறது.

மத்திய அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று புதிய கல்விக் கொள்கையை வகுத்த ஈரம் காய்வதற்குள், மத்திய பா.ஜ.க அரசே நினைத்துப்பார்க்காத அவசரத்தில், அதை அ.தி.மு.க அரசு பள்ளிப்பருவத்தில் உள்ள மாணவர்கள் மீது திணிப்பதும், கல்விக் கூடங்களுக்குச் செல்லும் மாணவர்கள் முதல் வகுப்பிலிருந்து வேலைக்குப் போகும் வரை பரீட்சை எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற நெருக்கடியைச் சுமத்துவதும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது. இதனை அதிமுக அரசு கைவிட வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin request to admk for govt exam for 5 and 8 students


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->