28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மேற்கொள்ளும் முயற்சி..? உச்ச கட்ட பரபரப்பில் அரசியல் களம்..! - Seithipunal
Seithipunal


தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 28 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு தற்போது திமுக நேரடியாக போட்டியிடுகிறது.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 1996 வரை காங்கிரஸ் எம்.பி.க்களேஇருந்தனர். கடந்த 1991-ம் ஆண்டு திமுக சார்பாக சதன் திருமலைக்குமார் போட்டியிட்டார்.

அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அருணாசலம் வெற்றி பெற்றார். அதன்பிறகு தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக போட்டியிடவில்லை. திமுக நேரிடையாக ஒரு முறைகூட தென்காசி தொகுதியில் வெற்றி பெறவில்லை.

இதனால் திமுக தென்காசி நாடாளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வந்தது. திமுக கூட்டணி சார்பாக புதிய தமிழக கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அப்பாத்துரை மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இதில் திமுக கூட்டணிசார்பாக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அப்பாத்துரை மட்டும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 1991-க்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தென்காசி தொகுதியில் திமுகநேரடியாக போட்டியிடுகிறது.

இதுவரை திமுக நேரிடையாக தென்காசி தொகுதியில் வெற்றி பெறாததால், இந்த முறை திமுக வெற்றி பெற ஆயத்தமாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk-stalin-in-salem-said-that-dmk-will-come-to-power-only


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->