பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று வழி என்ன தெரியுமா..? ஈரோட்டில் அதிமுக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்தது.

இந்த தடைக்கு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலுமாக குறைந்துள்ளது. வீதிகளில் கிடப்பதும், சாக்கடை அடைப்பு ஏற்படுவதும் குறைந்துள்ளது. இதை மீறி செயல்படுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், சாம்பார், சாப்பாடு, டீ உட்படஉணவு பொருட்களை பிளாஸ்டிக் பேப்பரிலும், கப்களிலும் கட்டிக் கொடுப்பதால், உடலுக்கு கேன்சர் உள்ளிட்ட தீங்கான நோய்கள் ஏற்படும்.

இதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். குறிப்பாக கேரி பேக் பயன்பாட்டுக்கு முழு தடை கட்டுப்பாடு உள்ளது. குழந்தைகள் உண்ணக்கூடிய சில நிறுவன சிப்ஸ், சாக்லெட் போன்றவைகளுக்கு விரைவில் தடை ஏற்படுத்தப்படும்.

இந்நடவடிக்கை படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது.இவற்றுக்கு மாற்றான பொருட்களை உற்பத்தி செய்ய அரசு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. அதனை நாடி வருவோருக்கு, தேவையான உதவிகள் செய்யப்படுகிறது.

மாநில அளவில், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்மிகப்பெரிய 273 நிறுவனங்களும், மாற்று பொருள் தயாரிப்புக்காக, இதுவரை அரசைநாடவில்லை.

அரசிடம் முயன்றால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்ததடையால், வேறு மாதிரியான வடிவில் தொழில் துவங்கப்படுவதால், தொழிலாளர்கள் வேலையிழக்கப்படவில்லை' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister kc karupannan told alternate for plastic


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->