அரசின் தற்போதைய நிதிநிலையில் இதெல்லாம் முடியாது! பரபரப்பை கிளப்பிய அமைச்சர் ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய திட்டதை கொண்டுவரவேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உட்பட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலவரையின்றி தொடரும் இந்த போராட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அவர்களது கல்வியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் பிப்ரவரி கடைசி வாரத்தில் பொதுத்தேர்வுகள் ஆரம்பமாக உள்ளநிலையில் ஆசிரியர்களை பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

   

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அமைச்சர் ஜெயக்குமார்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

 அரசின் தற்போதைய நிதிநிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை ஏற்பது மிக கடினம்.அரசின் நிதி நிலைமை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யும். 

அரசுக்கு கொடுப்பதற்கு மனசு இல்லாமல் இல்லை, கொடுப்பதற்கான நேரம் இது இல்லை . 

எனவே அதனை புரிந்துகொண்ட போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பி பணியை செம்மையாக ஆற்ற வேண்டும்.இதுதான் நமது சமுதாய கடமை.  என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jayakumar talk about jacto geo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->