அ.ம.மு.க ஒரு கட்சியே இல்லையா..? இரகசியம் உடைக்கப்பட்டது.. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்சியின் பொதுச் செயலாளரான பிறகு, அவர் ராஜினாமா செய்யவைக்கப்பட்டு, எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா சிறைக்குச் சென்றார். அதன் பின், அவரது ஆதரவாளராக இருந்த டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக சில சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.

அதன்பிறகு நடந்த சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து அமமுக கட்சி உருவானது.

இந்த நிலையில் அதிமுகவை விமர்சித்து அமமுகவினர் பேசிவரும் நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

அதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய 6 சதவீதம் வாக்குகள் தேவை. ஆனால் தேர்தலில் அது கிடைக்காது. ஒன்று அல்லது 2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.

எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடைசி வரை குழுவாக மட்டும் செயல்படவே வாய்ப்பு உள்ளது' என்று கூறியுள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister-Jayakumar-says-AMMK-Party-Can-not-register


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->