கொள்முதல் பத்தாயிரம் லிட்டர், விற்பனை 25,000 லிட்டா்..! இது என்ன மேஜிக்..?! - Seithipunal
Seithipunal


கோயம்புத்துார் மாவட்டம் பொள்ளாச்சியில், நீண்ட நாட்களாக இயங்கிக் கொண்டு வரும் பால் உற்பத்தி நிறுவனம், கவின்ஸ்.

கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இந்தப் பால் பாக்கெட்டுகளிலும், பெரிய ஹோட்டல்களுக்கு, பெரிய கேன்களிலும் சப்ளை செய்யப் படுகிறது.

பொள்ளாச்சி – கோவை மெயின் ரோட்டில் உள்ள இந்த கவின் பால் உற்பத்தி நிலையத்தின் வெளியே போர்டு ஏதும் வைக்கப் படவில்லை. சாலையோரத்தில் உள்ள தென்னந் தோப்பில், பால் உற்பத்தி ஆலையும், அருகில் வீடும் இருக்கிறது.

இந்த பால் உற்பத்தி நிலையத்தைப் பற்றி, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தப் பகுதியில் உள்ள மக்கள், பால் கம்பெனியிலிருந்து வெளியேறும், ரசாயனக் கழிவுகளைக் கண்டித்து, பல முறை போராட்டம் நடத்தி உள்ளனர்.

பால் உற்பத்தி நிலையத்தில, ரசாயனத்திற்கு என்ன வேலை? என்பதே, இங்குள்ளவர்களின் பிரதான கேள்வியாக இருக்கிறது.

இந்தப் பால் உற்பத்தி நிலையத்திற்கு, வெளியே, பால் பண்ணைகளில் இருந்து, தினசரி 10,000 லிட்டர் பால் கொள் முதல் செய்யப் படுகிறது. ஆனால், அதே வேளை, இங்கிருந்து வெளியே விநியோகிக்கப் படும் பாலின் அளவு, குறைந்த பட்சம் 25,000 லிட்டராக இருக்கிறது.

அந்த பத்தாயிரம் லிட்டர் பாலில் என்ன கலக்கிறார்கள்? என்று இன்று வரை தெரியவில்லை, என்று இந்தப் பகுதியில் உள்ள மக்கள், இந்த நிறுவனத்தை ஒரு மர்ம மாளிகையாகப் பார்க்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MILK SCAM IN KOVAI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->