என்ன தடுக்க யாரு? ஆர்பறித்து வரும் காவிரி அன்னை.! கலகத்தில் கர்நாடகா.! மகிழ்ச்சியில் தமிழ்நாடு.!! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 6 மாதத்துக்குப் பிறகு 50 கன அடியை தாண்டியுள்ளது. கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் காவிரியில் வினாடிக்கு 23,000 கன அடி நீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. அது முதல் அனைத்து இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குற்றாலம் போன்ற நீர் வீழ்ச்சிகளில் குளிக்க தடை விதித்தது அரசு. 
     
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்குப்  பருவமழையால் மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடந்த 4 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10.27 கன அடி உயர்ந்துள்ளது. தற்போதைய அணையின் நீர்மட்டம் 50.32 அடியாக உள்ளது. மேட்டூர் அணை  மொத்தம் 120 அடியை கொண்டது.  தற்போது அணையின் நீர் இருப்பு 18.015 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக  500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 10,026 கன அடியில் இருந்து 4,586 கன அடியாக குறைந்துள்ளது.  

இதனிடையே, கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கபினி அணை அதன்  முழுக் கொள்ளளவான 64 அடியை எட்டியது.  இதனையடுத்து அணைக்கு வரும் மொத்த நீரான 23,000 கன அடி நீரும் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur Dam Water Level Increased 50 Feet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->