தமிழக விவசாயிகளுக்கு இன்பச்செய்தி.! பொங்கிவரப்போகிறாள் அன்னை காவேரி.!! மேட்டூர் அணை திறப்பு.?!! - Seithipunal
Seithipunal


கடந்த நான்கு நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், இன்னும் ஊர் இரு தினங்களில் மேட்டூர் அணை பாசனத்திற்க்காக திறக்கபடலாம் என தெரிகிறது.

124 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 80 அடியை எட்டி உள்ளது.

கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து சுமார் விநாடிக்கு 45 ஆயிரத்து 250 கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதேபோல கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 700 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஒகேனக்கல்லில் காவிரிக்கு நீர்வரத்து விநாடிக்கு  45 ஆயிரம் கனஅடியாக நீர் வருவதால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளக்காடாக உள்ளது. ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்கவும்,பரிசல்களை இயக்கவும் 6-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 38 ஆயிரத்து 916 ஆயிரம் கனஅடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

வழக்கமாக மேட்டூர் அணை 90 அடி எட்டிய உடன் திறக்கப்படுவது வழக்கம். இதே நிலை நீடித்தால் விரைவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை ஒரு இரு நாளில் எட்டிவிடும். எனவே ஒரு இரு நாளில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

METTUR DAM MAYBE OPEN IN 1 OR 2 DAYS


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->