#BREAKING கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் சேலத்து மக்கள்.! கண்ணீர் விட்ட மக்களுக்கு.. கண்கொள்ளா காட்சி..!! மேட்டூரில் திடீர் பரபரப்பு.!!  - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணை கடல் போல் காட்சியளித்து கடந்த மூன்று வருடங்களாகிறது. கடந்த ஒரு வருடமாக மேட்டூர் அணை வறண்டு போய் காட்சியளிப்பதை தமிழக மக்கள் கண்ணீர் விட்டு கவலை கொண்டனர். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், கர்நாடக அரசு நமக்கு தண்ணீர் தராமல் ஒற்றை காலில் நின்றது.

ஒரு வழியாக இயற்கை அன்னையின் அருளால் இந்த வருடம் காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது, இதன் காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. கே.எஸ்.ஆர். அணையில் இருந்து வினாடிக்கு 47 ஆயிரத்து 951 கனஅடி வீதம் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரத்து 333 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மொத்தம் 81 ஆயிரத்து 284 கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 61 ஆயிரத்து 644 கனஅடியாக உள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.2 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்திற்கென வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவையும் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பின் எட்டும் நிலையில் உள்ளது. இதனால், இன்று இரவு காவேரியில் 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கரூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இன்று இரவு மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 7,500 கனஅடி வெளியேற்ற உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் மேட்டூர் அணையானது முழுவதும் நிரம்ப உள்ளது. தற்போதே கடல் போல் காட்சியளிக்கும், இந்த அக்கட்சியை காண மேட்டூர் அணையை சுற்றிலும் உள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் தற்போது திருவிழாவிற்கு வருவது போல் மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் வந்து காவேரி அன்னையின் ஆனந்த தாண்டவத்தை காண குவிந்தனர். இதனால் அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mettur dam full IN TONIGHT


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->