5 வருடங்களுக்கு பின் மேட்டூர் அணையில் நடக்க இருக்கும் அதிசியம்.! கரூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவையும் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பின் எட்டும் நிலையில் உள்ளது. இதனால், இன்று இரவு காவேரியில் 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கரூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவேரி நீர்ப்பிடிப்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததை அடுத்து கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. கே.எஸ்.ஆர். அணையில் இருந்து வினாடிக்கு 47 ஆயிரத்து 951 கனஅடி வீதம் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரத்து 333 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மொத்தம் 81 ஆயிரத்து 284 கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. 

இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 61 ஆயிரத்து 644 கனஅடியாக உள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்திற்கென வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ம்

இந்நிலையில், இன்று இரவு காவேரியில் 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கரூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை கல்லணையில் இருந்து 17 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்திற்க்காக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mettur dam full


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->