தமிழகத்திற்கு இன்றைய இரவு சாதாரணமாக இருக்கப்போவதில்லை.. பீதியில் உறைந்து போயுள்ள 12 மாவட்ட மக்கள்: இன்று இரவு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு..! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு 80,000 கனஅடி தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை இன்று தனது முழுகொள்ளளவை எட்டி உள்ளது. மேட்டூர் அணை இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு இப்போது மீண்டும் நிரம்புகிறது.

இந்தநிலையில்,  மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை  எட்டியதை தொடர்ந்து,  மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு 65,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு 75,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.41 அடியில் இருந்து 120.05 அடியாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது.  மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு 80,000 கன அடி நீர் திறக்கபட உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோர மக்கல் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் கரையோர மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் திறக்கப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  

நீர் நிலை அருகாமையில் குழந்தைகள் விளையாட செல்லாமல் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும்.  குளித்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல், செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். காவிரி நீர் பாயும் ஆறுகள், குளங்கள், நீர் நிலை பகுதிகளில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்று அறுவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur-dam-crosses-120-feet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->