கணவன்மார்கள்., "திறந்தே ஆகவேண்டும்"!! மனைவிமார்கள்., "மூடியே ஆகவேண்டும்"!!-தமிழக அரசால் வெடித்த போராட்டம்!! - Seithipunal
Seithipunal


 

கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தும், ஆண்கள் ஆதரவு தெரிவித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள கெட்டனமல்லி கிராமத்தில் கடந்த 12-ந்தேதி அரசு சார்பில் மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டதை கண்டித்து அப்பகுதி பெண்கள் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தியதை தொடர்ந்து மதுக்கடை திறப்பது கை விடப்பட்டது. ஆனால், கடந்த 17-ந்தேதி மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு கிராம பெண்கள் 'கடையை திறக்க கூடாது' என முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மீண்டும் மதுக்கடை மூடப்பட்டது.

ஆனால், 'குடியிருப்புகள் இல்லாத இடத்தில் மதுக்கடையை திறக்க வேண்டும்' என்று அங்கு வந்த சில ஆண்கள் கோ‌ஷம் போட்டனர். கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் 'தங்களது கோரிக்கையை நிறைவேற்றகோரி' மனு கொடுத்தனர்.

இந்நிலையில், தாசில்தார் சுரேஷ் தலைமையில், இரு தரப்பினருக்கிடையே சமாதானப் பேச்சு வார்த்தைக்கூட்டம் 'கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில்' போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மண்டல துணை தாசில்தார் உமா சங்கரி முன்னிலை வகித்தார். அப்போது 'அரசாங்க விதிகளின்படி அமைக்கபட்டுள்ள மதுக்கடையை திறப்பதால் எந்த வித பிரச்சினையும் ஏற்படாது' என்று தாசில்தார் தெரிவித்தார். இதனைக்கேட்ட பெண்கள், அந்த வழியாக பள்ளி மாணவர்களும், பெண்களும் செல்கிறார்கள். எனவே, மதுக்கடையை  வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கோ‌ஷம் போட்டனர்.

இதற்கு, ஆண்கள் 'ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கூட மதுக்கடையை வைக்க முடியாவிட்டால் வேறு எங்கு வைப்பது? நாங்கள் எங்கு சென்று குடிப்பது?' என கேள்வி எழுப்பினர். இரு தரப்பினரும் ஆளுக்கொன்றாக பேசியவாறு கோ‌ஷம் போட்டதால் சமாதானக்கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து மதுக்கடை அமைப்பது தொடர்பான சமாதானக்கூட்டம் தாசில்தாரால் ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பான முடிவை பொன்னேரி கோட்டாட்சியர் எடுப்பார் எனவும், அதுவரை மதுக்கடை திறக்கப்படாது எனவும் தாசில்தார் உறுதி அளித்தார். இதன் பிறகு இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.  

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mens said,'open the tasmac', womens said,'close the tasmac'


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->