மே 3 முதல் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தகவலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று அறிவித்துள்ளார். 

அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான மொத்த காலி இடங்கள் மே 15ல் தெரியவரும். மே மதம் 3 தேதி முதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் மாணவர்கள்  இணையதளங்களில் பதிவு செய்யலாம்.  விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவு செய்வதற்கு மே 30 கடைசி நாள்.

ஆன்லைன் விண்ணப்பத்தின் ஒரிஜினல் சான்றிதழ்களை அனுப்ப தேவையில்லை. விண்ணப்பங்கள் பதிவு  செய்வதற்காக தமிழகம் முழுவதும் 42 மையங்கள் திறக்கப்படும். இந்த உதவி மையங்களில் கணினிகள், அச்சுப்பொறிகள், பயிற்சி பெற்ற நபர்கள், குடிநீர் மற்றும் சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். மையங்களில் பதிவு செய்ய கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை . சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சில நாட்கள் தள்ளிப்போனாலும் கலந்தாய்வில் எந்த பாதிப்பு ஏற்படாது. என இன்று செய்தியாளர்களை சந்தித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May 3rd apply for Engineering Courses online


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->