அதிவிமர்சியாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு!. காளைகள் துள்ளிக்குதித்து சீறிபாய்ந்தது!.10 பேர் படுகாயம்!. - Seithipunal
Seithipunal



மதுரை மாவட்டம் மேலூர் அருகே உச்சரிச்சான்பட்டியில் மந்தைகருப்புசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அங்குள்ள கண்மாய் பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் மதுரை, மேலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிங்கம்புணரி போன்ற ஊர்களிலிருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்களும் குவிந்திருந்தனர்.

கிராமத்தினர் சார்பில் ஒவ்வொரு காளைக்கும் மரியாதை செலுத்தியபிறகு காளையை அவிழ்த்து விட்டனர். மஞ்சுவிரட்டில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டது. காளைகள் அனைத்தும் துள்ளி குதித்து சென்றது, வடிவாசலில் அவிழ்க்கப்படும் களைகளைவிட  மஞ்சுவிரட்டில் அவிழ்க்கப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து சென்றது.

அந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்ற மாட்டின் உரிமையாளர்கள் அனைவரும், பிள்ளைகளைப்போல் வளர்க்கப்பட்ட எங்கள் காளைகளுக்கு இது போன்ற விழாவில் தான் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறினர்.        


இந்த மஞ்சுவிரட்டு விழாவில் காளையை அடக்க முயன்ற 10 காளையர்கள் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மஞ்சுவிரட்டு விழாவை  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு கழித்தனர். மஞ்சுவிரட்டில் பங்கேற்ற சிறப்பு காளைகளுக்கும், காளையர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, குக்கர் போன்ற பரிசுகளை கிராமத்தினர் வழங்கினர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manjurittu Festival was held at Melur in Madurai district.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->